செய்திகள்

அரியலூரில் கூலித்தொழிலாளியிடம் ஆன்லைன் மூலம் ரூ.85 ஆயிரம் பணம் மோசடி

Published On 2017-07-12 16:10 IST   |   Update On 2017-07-12 16:10:00 IST
அரியலூர் அருகே வங்கி மேலாளர் பேசுவதாக கூறி கூலித்தொழிலாளியிடம் ரூ.82 ஆயிரம் ஆன்லைன் மோசடி செய்த நபரால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆதிச்சனூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன், கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

மகன்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு சுயதொழில் தொடங்குவதற்காக சிறுக, சிறுக ரூ.2 லட்சம் சேமித்து தனது கிராமத்திற்கு அருகில் உள்ள வங்கி ஒன்றில் சேமிப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட நபர் வங்கி மேலாளர் பேசுவதாகவும், வங்கி கணக்கிற்கு ஆவணங்களை புதுப்பிக்க வேண்டி இருப்பதால் உங்களது ஏ.டி.எம். அட்டை 10 இலக்க எண்ணை கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

தேவேந்திரனும் அதன்படி 10 இலக்க எண்ணை தெரிவித்துள்ளார். இதையடுத்த சில மணி நேரங்களில் தேவேந்திரனின் வங்கி கணக்கில் இருந்த தொகை அடுத்தடுத்து ரூ.82 ஆயிரத்து 400 எடுக்கப்பட்டது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தேவேந்திரன் அருகில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கை முடக்கினார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த 6 மாதங்களில் மட்டும் அரியலூர் மாவட்டத்தில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் என அப்பாவிகளின் பணம் வங்கியில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து புகார்கள் தெரிவித்தும் இது வரை நடவடிக்கையில் முன் னேற்றம் ஏற்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News