செய்திகள்

ஜெயங்கொண்டம் பகுதி கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு

Published On 2017-07-09 21:07 IST   |   Update On 2017-07-09 21:07:00 IST
ஜெயங்கொண்டம் நகர பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் பள்ளிக்கு 100 மீட்டர் சுற்றளவில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது எச்சரிக்கை பலகை வைக்காத 7 கடைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் சுகாதார மேற்பார்வையாளர் திருநாவுகரசு தலைமையில் ராஜ், வேல்முருகன், செல்வகாந்தி, பிரவீன்குமார், தமிழரசன், விஜயலட்சுமி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவரா மகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.        

Similar News