செய்திகள்

அரியலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-07-08 20:11 IST   |   Update On 2017-07-08 20:11:00 IST
விதிமுறைகளை மீறி செயல்படும் சிமெண்ட் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் சிமெண்ட் ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு மின்இணைப்பை விரைந்து வழங்க வேண்டும். ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும்.

பயிர்காப்பீடு தொகை, வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சிமெண்ட் ஆலைகளின் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் உள்ள தண்ணீரை கால்வாய் மூலம் ஏரிகளில் நிரப்பி விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உரங்களின் மீது செலுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Similar News