செய்திகள்
பீளமேடு அருகே கார் மோதி பிளஸ்-1 மாணவி பலி
கோவை பீளமேடு அருகே கார் மோதியதில் பிளஸ்-1 மாணவி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள சிவில் ஏரோடிராம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் இலக்கியா (வயது 16) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
முருகன் தினமும் தனது மகளை வீட்டில் இருந்து பஸ் நிறுத்தம் வரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று சாலையை கடந்து பஸ் ஏற்றி விட்டு வருவது வழக்கம்.
நேற்று வழக்கம்போல தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இலக்கியா அவசரமாக சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் இலக்கியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
தனது கண்முன்பு மகள் அடிபட்டு கிடப்பதை கண்ட முருகன் கதறி அழுதார். பின்னர் இலக்கியாவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இலக்கியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த முகமதுரபி(19) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.