செய்திகள்

அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாணவர்களின் மேல் படிப்புக்கான கையேடுகளை கலெக்டர் வழங்கினார்

Published On 2017-07-04 20:10 IST   |   Update On 2017-07-04 20:10:00 IST
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொ) தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 956 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இக்கூட்டத்தில், முதலைமச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளை உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலும், வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள் என்பவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலும், காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், சேகர் என்பருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலும் ஆகமொத்தம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், வேளாண்மைத் துறையின் சார்பாக மாநில அளவிலான நெல் பயிர் மகசூல் போட்டியில் வண்ணம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.பழனிசாமி என்பருக்கு 10.02 மெட்ரிக் டன் ஹெக்டேர் அளவில் கோ.ஆர் 50 நெல் ரகத்தினை சிறப்பாக மகசூல் செய்தமைக்காக ரூ.15 ஆயிரத்திற்கான பரிசுத்தொகை காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தனசேகரன் வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கான வழிகாட்டி கையேடுகளை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தனசேகரன் வழங்கினார்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முனியாண்டி, துணை இயக்குநர் வேளா ண்மை மனோகரன், உதவி இயக்குநர் (பொ) சாந்தி மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News