செய்திகள்
அரியலூர் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
அரியலூர் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
தஞ்சை அருகே உள்ளது பூண்டி கிராமம். இப்பகுதியை சேர்ந்த 6 பேர் அரியலூரில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை ஒரு வேனில் புறப்பட்டனர்.
வேன் அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி, நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.