செய்திகள்

வேதாரண்யத்தில் கார் கண்ணாடியை அடித்து உடைத்த 2 பேர் கைது

Published On 2017-06-26 16:28 IST   |   Update On 2017-06-26 16:28:00 IST
வேதாரண்யத்தில் கார் கண்ணாடியை அடித்து உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

திருத்துறைப்பூண்டியில் வசித்து வருபவர் முகமது நிஜாமுதீன் (வயது 43) இவரது மனைவி சேத்தங்குடியில் வசித்து வருகிறார்.முகமது நிஜாமுதீன் தனக்கு சொந்தமான காரில் தோப்பு துறையில் உள்ள சகோதரி வீட்டுக்கு நேற்று வந்தார். இதுபற்றி அறிந்த அவரது மகன்கள் சருக்கன் அகமது, உஸ்மான் அகமது ஆகியோர் சம்பவ இடம் வந்து சொத்து தொடர்பாக பேசி தகராறு செய்தனர்.

அப்போது அவர்கள் அவதூறாக பேசி முகமது நிஜாமுதீன் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.14 ஆயிரம் ஆகும்.

இதுபற்றி முகமது நிஜாமுதீன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News