செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-06-24 16:37 GMT   |   Update On 2017-06-24 16:37 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயங்கொண்டம் தொலை தொடர்புத்துறை துணைக் கோட்ட பொறியாளர் பதவியேற்று 3 ஆண்டுகளில் அனைத்து வழிகளிலும் கையூட்டு பெற்றுக் கொண்டு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார்.

தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை. ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்குவதில்லை. சம்பளத்தை முறையாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கான சம்பளத்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

மேலும், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் துணைக் கோட்ட பொறியாளரை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லை எனில் எங்களின் போராட்டம் தீவிரமடையும் என பிஎஸ்என்எல். ஊழியர்கள் எச்சரித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அஸ்லன்பாஷா, பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம், பெரியசாமி, இளங்கோவன், தேவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News