செய்திகள்

இலுப்பூர், அறந்தாங்கியில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-06-21 22:01 IST   |   Update On 2017-06-21 22:01:00 IST
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலுப்பூர்:

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வட்ட பிரதிநிதி ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் திருமலை கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்.

வருவாய் நிர்வாக ஆணையரை மாற்ற வேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சங்க பொறுப்பாளர்களை அவமதித்த சிவகங்கை மாவட்ட கலெக்டரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அறந்தாங்கி தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் செந்தில்குமார், பொருளாளர் மாரிமுத்து, செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News