செய்திகள்

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு

Published On 2017-06-20 10:59 IST   |   Update On 2017-06-20 10:59:00 IST
பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 

அவர்கள் அனைவருக்கும் கணினிமூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பிலுள்ள, 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் பிஇ.,- பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு, ஒற்றைச் சாளர கவுன்சலிங்மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இந்நிலையில், விண்ணப்பித்தவர்களின் தர வரிசையை முடிவுசெய்வதற்கான 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.

மாணவர்கள், தங்கள் விண்ணப்ப எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டு, தங்களுக்குரிய ரேண்டம் எண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.



மொத்தம் 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இன்று ரேண்டம் எண் வெளியிடப்படுள்ள நிலையில், வரும் 22 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Similar News