செய்திகள்

வேதாரண்யம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2017-06-19 15:54 IST   |   Update On 2017-06-19 15:54:00 IST
வேதாரண்யம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியை சேர்ந்த காந்தி மகன் மதியழகன் (வயது33). இவர் வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 8-ம் வகுப்பு மாணவி தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளார்.

இதுபற்றி மாணவியின் பெற்றோர் தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிவு செய்து மதியழகனை கைது செய்தார். இந்த சம்பவம் தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News