செய்திகள்
கூடுவாஞ்சேரியில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை
கூடுவாஞ்சேரியில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி:
சின்ன காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் அருள்பதி (35). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இவர் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அவரை உருட்டுக் கட்டையால் சரமாரி அடித்து உதைத்தது. பிறகு அவரை வெட்டி படுகொலை செய்தனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிடவே கும்பல் தப்பி ஓடிவிட்டது.
அருள்பதிக்கும், மாடம்பாக்கம் வள்ளலார் நகரை சேர்ந்த உஷா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது.
இதனால் உஷாவின் உறவினர்கள் அருள்பதியை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேறு சிலருடன் சேர்ந்து அருள்பதியை வெட்டி கொன்றது தெரிய வந்தது.