செய்திகள்
வேதாரண்யம் அருகே கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் மகன் கதிநிலவன்(18), செல்வம் மகன் கேசவன்(25). இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் நெய்விளக்கு அண்டர்காடு இணைப்பு சாலையில் சென்றனர்.
அப்போது அவ்வழியே வந்த கார் மோதியதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.