செய்திகள்
குழந்தைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
புதுக்கோட்டையில் குழந்தைகள் தொடர்பான பல்வேறு புகார்களுக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முதல் கையொப்பமிட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து கூறியதாவது:-
தமிழக அரசு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன்படி குழந்தை தொழிலாளர்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் நாள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களிலும் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது.
தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தினால் ரூ.50,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை குழந்தை தொழிவாளர் அற்ற மாவட்டமாக மாற்றும் வகையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து கடைகள், உணவகங்கள், வர்த்தகம் மற்றும் தொழிற் நிறுவனங்கள், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் செய்யும் கடைகளில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு புகார்களுக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தொழிலாளர் ஆய்வாளர் சுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, உதவி ஆய்வாளர் குணசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.