செய்திகள்
வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வேதாரண்யம் அருகே மனைவியை கோவிலுக்கு கணவர் அழைத்துள்ளார். அவர் வர இயலாது என்று கூறியதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டிணம் காவல் சரகம் வடமழை மணக்காடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் அய்யப்பன்(வயது34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 3 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த 10-ந்தேதி செம்போடையில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு மனைவி சரஸ்வதியை அய்யப்பன் அழைத்துள்ளார். ஆனால் அவர் குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும். அதனால் வரவில்லை என்று கூறினாராம். இதனால் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம். உடனடியாக அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.