செய்திகள்
வேதாரண்யம் அருகே மூதாட்டி மாயம்
வேதாரண்யம் அருகே மூதாட்டி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாரதம்பாள் (68). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த 5-ந்தேதி தனது 2 வது மகன் தமிழ்செல்வன் (33) என்பவர் தாயாரை வீட்டில் விட்டு விட்டு அங்குள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது சாரதம்பாளை காணவில்லை. உறவினர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தமிழ்செல்வம் கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். சப் -இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து சாரதம்பாளை தேடி வருகிறார்.