செய்திகள்
கோடியக்கரையில் பிணமாக கிடந்தவர் யார்?: போலீசார் விசாரணை
கோடியக்கரை செல்லக்கன்னி வாய்க்காலில் 30 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். யார் அவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை செல்லக்கன்னி வாய்க்காலில் 30 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் முக்கால் கால் சட்டையும், டீ சர்ட்டும் அணிந்து இருந்தார்.
முதலில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்பட்டது. பின்னர் அதனை உறவினர்கள் மறுத்தனர். எனவே பிணமாக கிடந்தவர் யார்? என்பது தெரியவில்லை.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ராமநாதபுரம் கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபரின் பிணம் இன்று கோடியக்கரைக்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.