செய்திகள்

அம்மாபேட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-06-05 16:20 IST   |   Update On 2017-06-05 16:20:00 IST
அம்மாபேட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை மற்றும் பவானி அருகே குட்ட முனியப்பன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு கடந்த 3 மாத காலமாக குடிநீர் வினியோகம் சரியாக செய்ய வில்லையாம்.

இது குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அந்த பகுதி மக்கள் குடிநீர் ஒழுங்காக வழங்க கோரி பவானி-மேட்டூர் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என மக்கள் கூறினர். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி துணை அலுவலர் லதா மற்றும் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் ஆகியோர் விரைந்தனர்.

அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News