செய்திகள்

வேதாரண்யத்தில் மீனவர் படகு மாயம்

Published On 2017-06-03 11:45 GMT   |   Update On 2017-06-03 11:45 GMT
வேதாரண்யத்தில் கரையில் நிறுத்தி வைத்திருந்த மீனவர் படகு மாயமானதால் சக மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு படகை மீட்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமன். இவருக்கு சொந்தமான பைபர் படகை ஆறுகாட்டுத்துறையில் கரையோரம் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று படகு உரிமையாளர் ராமன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மனோஜ், மகேஷ் ஆகிய மூவரும் மீன் பிடிப்பதற்காக படகை எடுக்க சென்றனர். ஆனால் கரையில் நிறுத்தி வைத்திருந்த படகு, அதிலிருந்த இன்ஜின், 5 லிட்டர் டீசலோடு மாயமானது தெரியவந்தது. இது குறித்து அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாயமான படகு காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் ஆள் இன்றி தனியாக செல்வதை கண்ட அப்பகுதி மீனவர்க்ள அதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் இதுபற்றிய தகவலின் பேரில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் படகை கொண்டு வர காமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.

ஆறுகாட்டுத்துறையில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த படகு கடும் சூறாவளி காற்று காரணமாக கயிறு அறுந்து கடலுக்குள் சென்று காமேஸ்வரம் பகுதிக்கு வந்தது.

Tags:    

Similar News