செய்திகள்
காண்டிராக்டர் மனைவியை கத்தியால் குத்தி ரூ.2 லட்சம் நகை கொள்ளை
நெய்வேலி அருகே காண்டிராக்டர் மனைவியை கத்தியால் குத்தி ரூ.2 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 60). காண்டிராக்டர். இவரது மனைவி மணிமேகலை (55). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் வீட்டிற்குள் திடீரென்று உள்ளே புகுந்தனர். அவர்களில் 2 பேர் சுந்தரமூர்த்தியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். நகை, பணத்தை தருமாறு கூறினர். மணிமேகலை அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி தறுமாறு எச்சரித்தனர். அதற்கு அவர் மறுத்தார். உடனே மணிமேகலையை கத்தியால் சரமாரியாக குத்தினர். அவர் அலறினார். அவர் கையிலிருந்து ரத்தம் கொட்டியது.
பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி கொலுசு, கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். படுகாயமடைந்த மணிமேகலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்றுநின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கொள்ளை நடந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. முகமூடி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளைசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.