செய்திகள்

தொடர்ந்து 40 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை

Published On 2017-04-28 16:41 IST   |   Update On 2017-04-28 16:41:00 IST
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 40 அடியில் நீடித்து வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் மட்டம் தொடர்ந்து 41, 40 அடியில் நீடித்து வருகிறது. அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படா விட்டாலும் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 135 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையில் நேற்று வினாடிக்கு 192 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி லேசாக அதிகரித்து வினாடிக்கு 337 கன அடி வீதம் தண்ணீர் வந்த கொண்டிருக்கிறது.

ஊட்டி மலைப்பகுதியில் பில்லூர் அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Similar News