செய்திகள்

கடம்பூர் வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி - மாவோயிஸ்டுகள் பதுக்கினரா?

Published On 2017-04-28 16:24 IST   |   Update On 2017-04-28 16:24:00 IST
கடம்பூர் வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி கடந்த 10 மாதமாகியும் யாருடையது? என தெரியாமல் உள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டி.என். பாளையம் வனச்சரகம் மல்லியம்மன் துர்க்கத்தில் கடந்த ஆண்டு ஜீலை மாதம் 12-ந்தேதி மல்லியம் மன் துர்க்கம் வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் வன விலங்கு கணக்கெடுப்பு நடத்த சென்றிருந்தனர்.

அப்பகுதியிலுள்ள கொய்யாத்தோப்பு அருகிலுள்ள கல் சந்தில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதை கண்ட வனக்காப்பாளர் முத்துசாமி எடுத்து கடம்பூர் போலீசில் புகார் அளித்து ஒப்படைத்தார். புகாரை போலீசார் பதிவு செய்தனர்.

ஆனால் இன்று வரை அந்த துப்பாக்கி யாருடையது? என தெரியவில்லை. வேட்டையாடும் கும்பல் வைத்ததா? அல்லது மாவோயிஸ்டுகள் யாரேனும் பதுக்கி வைத்து விட்டு சென்றனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு துப்பு துலக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

Similar News