செய்திகள்

சென்னை விமானத்தில் கோளாறு: 164 பயணிகள் தப்பினர்

Published On 2017-04-12 06:13 GMT   |   Update On 2017-04-12 06:13 GMT
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதிஷ்டவசமாக 164 பயணிகள் உயிர் தப்பினர்.
ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. 164 பயணிகள் அதில் இருந்தனர்.

ஓடு தளத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு சுழலாமல் நின்றது. இதனால் ஓடு தளத்தில் சக்கரம் உரசி புகை ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தினார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இழுவை எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த விமானத்தை இழுத்து வழக்கமான இடத்தில் நிறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிச் சென்றனர்.

இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த விமானம் காலை 6.15 மணிக்கு மீண்டும் டெல்லிக்கு புறப்பட இருந்தது. இதை தொடர்ந்து கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Similar News