செய்திகள்

தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2017-04-11 17:12 IST   |   Update On 2017-04-11 17:12:00 IST
தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை விளார் சாலையில் உள்ள பர்மா காலணி அண்ணாநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சூர்யா (வயது18). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாரவிதங்கம், குண்டர் சட்டத்தில் சூர்யாவை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறுவர் சிறையில் அடைத்தார்.

Similar News