செய்திகள்
மதுரையில் லாரி மோதி என்ஜினீயர் பலி
மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் என்ஜினீயர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை:
மதுரை நரிமேடு பஜனைமட தெருவைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் ராம்குமார் (வயது 24). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு ஏற்றுமதி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை ராம்குமார் மோட்டார் சைக்கிளில் அழகர்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மருதங்குளம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி தெற்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.