செய்திகள்
கைக்குழந்தையுடன் பெண் கைது: கீரனூரில் போலீசாரை கண்டித்து மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
கீரனூரில் கைக்குழந்தையுடன் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீரனூர்:
கீரனூர் அருகே உள்ள கடம்புப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மனைவி மகாலட்சுமி, இவர்களுக்கு கைக்குழந்தை உள்ளது. இவர் தனது வயலில் கடலை பயிர் நடவை செய்திருந்தார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சேவியர் என்பவரின் மாடுகள் வெங்கடாசலத்தின் வயலில் மேயவிடப்பட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பிலும் ஒருவரை கைது செய்தனர்.
இதில், வெங்கடாசலபதி இல்லாததால் அவரது மனைவி மகாலட்சுமி என்பவரை கைக்குழந்தையுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் சார்பில் கீரனூர் காந்தி சிலை முன்பு செயலாளர் லீலா ஆரோக்கிய மேரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடராசன் தொடங்கி வைத்தார்.
இதில் தேசிய மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி, திலகவதி, ஆரோக்ய ஜெனிபர், சிறுமலர் செல்வி, சித்ரா, நூர்ஜகான், வெண்ணிலா, பழனியம்மாள், பூமதி, வள்ளி, அற்புதமேரி, விமலா, நாகலெட்சுமி, பத்மாவதி, ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டதில் கைக் குழந்தையுடன் மகாலட்சுமி கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன, இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75 பேர் கலந்து கொண்டனர்.