செய்திகள்

பெரும்பாறையில் பலத்த மழையால் இடிந்து விழுந்த தொழிலாளி வீடு

Published On 2017-03-16 17:23 IST   |   Update On 2017-03-16 17:23:00 IST
பெரும்பாறையில் பெய்த பலத்த மழையினால் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது.
பெரும்பாறை:

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாண்டிக்குடி, பெரும்பாறை, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அப்போது பெரும்பாறை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ஜோதி என்பவரின் வீட்டுக்கூரை இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்த டி.வி, சைக்கிள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேமடைந்தன.

மேலும் அங்குள்ள இந்திரா நினைவு குடியிருப்பில் உள்ள 33 வீடுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. 14 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இவை சீரமைக்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் இடிந்துவிழும் அபாயம் உள்ளது.

இதனால் அங்கு வாழும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் அரசு சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News