செய்திகள்

விபத்தில் பலியான 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2017-03-15 06:53 GMT   |   Update On 2017-03-15 06:53 GMT
விபத்தில் உயிரிழந்த 21 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக, தனிப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த துரை;
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நடராஜன்;
மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6-ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்;
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன்;
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கண்ணதாசன்;
அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜராஜன்;
சேலம் மாநகரம், மாநகர ஆயுதப் படை, வாகனப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கண்ணன்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன்;
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி போக்குவரத்துக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த உமாபதி;
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்திலிருந்து அயல் பணியில் பேரிகை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பால சுப்பிரமணியன்;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஹட்கோ காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கந்தசாமி;
மதுரை மாநகர், மதுரை போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மகப்பூப் பாஷா;
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணியன்;
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாமிநாதன்;
ஈரோடு மாவட்டம், கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சிவக்குமார்;
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராமசுப்பிரமணியன் ஆகிய காவல் துறை அலுவலர்கள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அத்திமூர் கிராமத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஹெல்பராக பணிபுரிந்த ராமஜெயம்;

திருப்பூர் மாவட்டம், பனிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாட்டர் மேனாக பணியாற்றி வந்த ராமசாமி;
திருநெல்வேலி மாவட்டம், பரிவிரிசூரியன் கிராமத்தைச் சேர்ந்த இலாங்கமணி மனைவி செல்லம்மாள்;
வேலூர் மாவட்டம், கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி;
தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த 21 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Similar News