செய்திகள்

திருவரங்குளம் பகுதியில் கழுதை பால் விற்பனை

Published On 2017-03-10 23:10 IST   |   Update On 2017-03-10 23:10:00 IST
திருவரங்குளம் பகுதியில் ஒரு சங்கு கழுதை பால் ஐம்பது ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கைக்குறிச்சி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வளர்ந்து வரும் நவீன அறிவியல் யுகத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய்தீர்க்கும் மருந்து என்று அழிந்து வரும் கழுதைகளைக்கொண்டு கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சங்கு கழுதை பால் ஐம்பது ரூபாய் என்று கூவி கிராமங்களை நோக்கி விற்பனை செய்து வருகின்றனர். இன்றைய யுகத்தில் இது சாத்தியமா என்றாலும் இத்தொழில் ஈடுபட்டுள்ளோர்களுடைய வாழ்வாதாரம் பிள்ளைகளின் கல்வி பொருளாதாரம் ஆகியவை கேள்விக்குறியாகவே உள்ளது.

Similar News