செய்திகள்

மாமல்லபுரத்தில் லாரி மோதி விவசாயி பலி

Published On 2017-03-07 12:28 IST   |   Update On 2017-03-07 12:28:00 IST
மாமல்லபுரத்தில் லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த குழிப்பாந்தண்டலத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது45). விவசாயி.

நேற்று மாலை அவர் மாமல்லபுரத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து கொண்டு இருந்தார். பூஞ்சேரி கூட்டுரோடு அருகே வந்த போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News