செய்திகள்
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்: முத்தரசன்
மத்திய அரசு உடனடியாக இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை ஒன்றிணைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபடும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஓரிடத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயு மற்றொரு இடத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்படும் இந்த எரிவாயு திட்டத்தால் அந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் அழியும் என்ற தகவல் விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் விளைச்சல் காணும் பழ வகைகள், காட்டு தாவரங்கள், வாழை போன்ற பயிர்கள் அழிந்துவிடும் நிலையும் உருவாகி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து அந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வடகாடு, கோட்டைகாடு, கருக்காகுறிச்சி, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆய்வுப்பணி மேற்கொள்ள வரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி கிராமமக்கள் நெடுவாசல் கிராமத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெடுவாசல் பகுதிக்கு வந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும், அதில் அந்த நிறுவனத்தால் போடப்பட்ட ராட்சத ஆழ்குழாய் கிணற்றையும் பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களின் நிலை மற்றும் போராட்டம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரி பாசன பகுதிகளில் விளை நிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திட முயற்சித்தது. அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினாலும், விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரின் போராட்டத்தினாலும் தமிழக அரசு அத்திட்டத்திற்கு தடை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பசுமையான பகுதியான நெடுவாசல் கிராமத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் எனும் பெயர் மாற்றி இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.
விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முடங்கிவிடும். மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழக அரசு மீத்தேன் திட்டத்தை கைவிட எடுத்த நடவடிக்கையை போல் இத்திட்டத்தையும் தடுக்க முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிடாவிட்டால் இப்பகுதி மக்களை ஒன்றிணைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.