செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-02-20 15:05 GMT   |   Update On 2017-02-20 15:05 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பகுதிகளை பார்வையிட சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வயல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் .எனவே அதனை செயல் படுத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நெடுவாசல் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பகுதிகளை பார்வையிட சென்றனர். இதையறிந்த பொதுமக்கள், விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமை மீட்புக் குழுவினர் அறிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் அனுமதி கேட்க , புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அக்குழுவை சேர்ந்த 3 பேரை போலீஸ் நிலையத்திற்குள்ளேயே நீண்ட நேரம் வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News