செய்திகள்
திருப்புவனம் அருகே சொத்து தகராறில் தந்தைக்கு கொலை மிரட்டல்
திருப்புவனம் அருகே சொத்து தகராறில் தந்தையை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
திருப்புவனம் தாலுகா ஏ.வெள்ளக்கரையை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அழகர்சாமி (வயது 21). இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமி, தந்தையை கம்பால் தாக்கி காயப்படுத்தினார். காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து பாண்டி மனைவி முத்து இருளாயி (48), திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், அழகர் சாமி மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.