செய்திகள்

டிராக்டர் மீது வேன் மோதல்: பாலக்கோட்டை சேர்ந்த பக்தர்கள் 20 பேர் படுகாயம்

Published On 2017-02-11 18:37 IST   |   Update On 2017-02-11 18:36:00 IST
பரமத்தி அருகே டிராக்டர் மீது வேன் மோதிய விபத்தில் பாலக்கோட்டை சேர்ந்த பக்தர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பரமத்தி வேலூர்:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிந்தலக்கரையில் உள்ள வெக்காளி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வேனில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

நேற்று இரவு 9 மணிக்கு அந்த வேன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே பைபாஸ் ரோடு அருகே வந்த போது கரும்பு ஏற்றிக்கொண்டு மோகனூருக்கு சென்று கொண்டு இருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் பாலக்கோட்டைச் சேர்ந்த கனகராஜ் (32), ஆறுமுகம் (50), முனியம்மாள் (25), ஜமுனா (29), செல்வி (37), சின்ராஜ் (45) உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறறு வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News