செய்திகள்

ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி கிழக்கு கடற்கரை வரை எண்ணெய் படலம் பரவியது

Published On 2017-02-03 11:19 IST   |   Update On 2017-02-03 11:19:00 IST
எண்ணூர் கடலில் தொடங்கிய எண்ணெய் படலம் சென்னை மட்டுமல்லாது, ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி கிழக்கு கடற்கரை வரை எண்ணெய்படலம் பரவியது.
காஞ்சிபுரம்:

எண்ணூர் கடலில் தொடங்கிய எண்ணெய் படலம் சென்னை மட்டுமல்லாது, கிழக்கு கடற்கரை பகுதி வரையிலும் பரவி கடுமையான மாசு ஏற்படுத்தியுள்ளது.

கடலோர காவல் படையினர் சிறிய கப்பல்களில் சென்று எண்ணெய் படலத்தை கண்டுபிடித்து வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை வரை கிழக்கு கடற்கரைசாலை கானாத்தூர் வரை 15 கி.மீ. தொலைவுக்கு பரவிஇருந்தது. அதன் பிறகு பாலவாக்கம் வரை பரவியது. நேற்று மாலை ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு பரவியது. நாளை வி.ஜி.பி. தங்க கடற்கரையை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

எண்ணெய் படலம் பரவல் தொடர்பாக ஐதராபாத்தில் தேசிய கடல்சார் தகவல் தொடர்பு மையம் ஆய்வு செய்து கம்ப்யூட்டர் மூலம் மாதிரி எடுத்து அனுப்பி உள்ளது. இதன் மூலம் எண்ணெய் படலம் எங்குவரை பரவி உள்ளது என்பது கண்டறியப்பட்டு வருகிறது.

Similar News