செய்திகள்

அரச்சலூரில் பாட்டி இறந்த துக்கம் தாங்காமல் தீக்குளித்து வாலிபர் தற்கொலை

Published On 2017-02-02 16:32 IST   |   Update On 2017-02-02 16:32:00 IST
அரச்சலூரில் பாட்டி இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

அரச்சலூர்:

அரச்சலூர் அருகே உள்ள கரட்டாங்கரடு என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரம் .இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 21). இவர் வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

ரஞ்சித் குமாரின் பாட்டி உடல் நலம் இல்லாமல் இருந்தார். இதனால் அவர் திடீர் என்று இறந்து விட்டார்.

பாட்டியின் மேல் அதிக பாசம் வைத்திருந்த ரஞ்சித்குமார் பாட்டி இறந்ததில் இருந்து சோகமாக காணப்பட்டார்.

இந்த நிலையில் அவர் அதிக துக்கம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனால் சம்பவத்தன்று அவர் தனது வீட்டின் உள்ளே சென்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனால் உடல் கருகிய நிலையில் ரஞ்சித் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News