செய்திகள்

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தனி வார்டு தொடக்கம்

Published On 2017-02-02 12:37 IST   |   Update On 2017-02-02 12:38:00 IST
பன்றிக்காய்ச்சலுக்கு ஒரேவாரத்தில் 2 பேர் பலியானதையடுத்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மர்ம காய்ச்சலுக்கு 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து மர்ம காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. கும்மிடிப்பூண்டியில் கடந்த வாரம் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். திருத்தணியில் நேற்று பன்றிக்காய்ச்சலுக்கு வீரராகவன் என்பவர் பலியானார்.

இதையடுத்து சுகாதாரத் துறை இணை இயக்குனர் மோகன் உத்தரவின் பேரில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தனி வார்டில் 6 படுக்கைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு ஷிப்டுக்கு 3 டாக்டர்களும், 6 நர்சுகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Similar News