செய்திகள்
கல்ப்பாக்கம் அருகே ஆம்புலன்சு வேன் கவிழ்ந்து நோயாளி-டிரைவர் பலி
கல்பாக்கம் அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஆம்புலன்சு வேனை டிரைவர் திருப்பினார். இதில் ஆம்புலன்ஸ் வேன் கவிழ்ந்ததில் டிரைவர்,நோயாளி இறந்தனர்.
மதுராந்தகம்:
புதுச்சேரி, இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து இன்று காலை ஆறுமுகத்தை ஆம்புலன்சு வேனில் சென்னைக்கு அழைத்து வந்தனர். டிரைவர் ராமராஜ் (37) வேனை ஓட்டினார். உடன் மருத்துவ உதவியாளர்கள் 2 பேர் மற்றும் ஆறுமுகத்தின் உறவினர் ஒருவர் இருந்தனர்.
கல்பாக்கத்தை அடுத்த வடபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஆம்புலன்சு வேனை டிரைவர் திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்சு வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பலத்த காயம் அடைந்த நோயாளி ஆறுமுகம், டிரைவர் ராமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் உடன் இருந்த மருத்துவ உதவியாளர்கள் 2 பேர் மற்றும் ஆறுமுகத்தின் உறவினர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.