செய்திகள்

போலீசார்-சிறைக்காவல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் தகவல்

Published On 2017-02-01 19:06 IST   |   Update On 2017-02-01 19:06:00 IST
போலீசார் மற்றும் சிறைக்காவல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாதிரி உடல் திறன் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.-

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் மூலம் ஆண், பெண் இரண்டாம் நிலை காவலர், ஆண், பெண் இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் ஆண் தீயணைப்போர் என 15 ஆயிரத்து 664 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பபடுகிறன்றன.

இதற்கு 10-ம் வகுப்பு கல்வி தகுதி இருப்பது அவசியம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல்(பிப்.1-ந்தேதி) அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும், 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 2 ஆண்டுகளும், ஆதி திராவிடர், ஆதிதிரா விடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியின வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புனை சார்ந்த ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு 5 ஆண்டுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கு 21 ஆண்டுகளும்(45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்) உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ.உயரம், பெண்கள் 159 செ.மீ.உயரம் இருக்க வேண்டும். இந்த உடற்கூறு அளவில் உரிய பிரிவினருக்கு தளர்வும் உண்டு.

இதற்கான விண்ணப் பங்கள் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களில் கிடைக்கும். தபால் நிலையங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையினை தேர்வு குழுமத்தின் www.tnusrb.tn.gov. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும் 22-ந் தேதி(புதன்கிழமை) கடைசி தேதி ஆகும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர், தீயணைப் போர் தேர்விற்கு தயார் செய்ய உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி உடல் திறன் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Similar News