செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 317 மனுக்கள் குவிந்தது

Published On 2017-01-31 18:40 IST   |   Update On 2017-01-31 18:40:00 IST
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மொத்தம் 317 மனுக்கள் குவிந்தது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, குடிநீர் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மொத்தம் 317 மனுக்கள் குவிந்தது.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், தனித்துணை கலெக்டர் ராதாமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியம் உள்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறைகள் இருந்தால் சொல்லுங்க...

நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மின் கோட்ட (நகரியம்) அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு குறைகளை கேட்கிறார். இதனால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவை கூட்டத்தில்

சுத்தமான குடி தண்ணீர் வழங்க வேண்டுகோள்

ஈரோடு தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வீரகோபால் தலைமையில் நடந்தது. பேரவை நிதிச் செயலாளர் பெருமாவளவன், வக்கீல் ஆனந்தன், வீரவேந்தன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியத் தொகையாக ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும். துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான குடி தண்ணீர் வழங்க வேண்டும் போன்ற தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News