செய்திகள்
கடம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த கரடி குட்டி
கடம்பூர் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த கரடி குட்டி காட்டுக்குள் போக மறுத்து அங்கேயே படுத்து கொண்டது. இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ளது.கடம்பூர் வனப்பகுதி இந்த வனப்பகுதி அருகே உள்ள வனக்கிராமம் தொண்டூர்.
இந்த ஊரையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. காட்டிலிருந்து சுமார் 4 வயது நிரம்பிய ஒரு கரடிகுட்டி ஊருக்குள் புகுந்தது.
வழிதவறி ஊருக்குள் புகுந்த இந்த கரடி குட்டி ஊரையொட்டி உள்ள ஒரு குட்டைபகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
இதனைகண்ட அப்பகுதி மக்கள் அந்த கரடி குட்டியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த கரடி குட்டி பொதுமக்கள் விரட்டியும் காட்டுக்குள் போக மறுத்து அங்கேயே படுத்து கொண்டது.
இதனால் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் தொண்டூர் கிராமத்துக்கு விரைந்தனர்.
அங்கு வழிதவறி ஊருக்குள் புகுந்த கரடி குட்டியை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கரடி குட்டியை வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.