செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலர் கடத்தல் - 2 வாலிபர்கள் சிக்கினர்

Published On 2017-01-31 13:28 IST   |   Update On 2017-01-31 13:28:00 IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.7½ லட்சம் அமெரிக்க டாலரை உடல் முழுவதும் டேப்பால் ஒட்டி கடத்திய 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பிரேம்குமார், அரீஷ்தயாத் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது இருவரும் உடல் முழுவதும் அமெரிக்க டாலர் நோட்டுகளை ‘டேப்பால்’ ஒட்டி கடத்தி வந்திருந்தது தெரிந்தது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும். இந்த பணத்திற்குரிய ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத் தொடர்ந்து பிரேம் குமார், அரீஷ்தயந்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News