செய்திகள்
தா.பாண்டியன் பேட்டி அளித்த காட்சி.

மெரினா போராட்ட கலவரம் பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்: தா.பாண்டியன்

Published On 2017-01-31 10:55 IST   |   Update On 2017-01-31 10:55:00 IST
மெரினா போராட்ட கலவரம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்திய நாட்டு பொருளாதாரத்தில் ஒரு நிச்சய மந்த நிலை நீடிக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பணம் ஒழியாது என்று பொருளாதார துறை ஆலோசகர் சாமிநாதன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டாக மழை முற்றிலும் பொய்த்து விட்டது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய குழு வறட்சி பகுதிகளை பெயருக்கு பார்வையிட்டதை போல் உள்ளது. உடனடியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில் 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடந்துள்ளது. 6-வது நாள் ஏற்பட்ட கலவரம் மிகவும் வருந்ததக்கது. இந்த கலவரம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

பேட்டியின் போது மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், மாநில பொறுப்பாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News