செய்திகள்

விவசாய தோட்டத்தில் மோட்டார் திருட்டு: பவானி வாலிபர் சிக்கினார்

Published On 2017-01-27 16:26 IST   |   Update On 2017-01-27 16:26:00 IST
விவசாய தோட்டத்தில் இருந்த மோட்டாரை வாலிபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு,சோலார் பகுதியில் சமீப காலமாக விவசாய தோட்டத்தில் உள்ள மோட்டார் பம்புகள் மர்மமான முறையில் திருடப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் இருந்த மோட்டாரை ஒரு வாலிபர் திருடி கொண்டிருந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் பவானி, காமராஜ் வீதியை சேர்ந்த தனபால் (24) என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News