செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ. 70.75 லட்சம் வருமானம்

Published On 2017-01-27 10:30 GMT   |   Update On 2017-01-27 10:30 GMT
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியலில் கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ரூ. 70.75 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
மதுரை:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 28 நாட்களுக்குக்கான உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.

இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில், கோவில் ஊழியர்கள், வங்கி பணியாளர்கள், பக்தசபையினர் உண்டியலை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 70 லட்சத்து 75 ஆயிரத்து 684 செலுத்தியிருந்தனர். மேலும், தங்கத்தாலி, சங்கிலி உள்ளிட்டவையாக 248 கிராமும், வெள்ளியிலான பொருட்கள் 709 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

உண்டியலில் அமெரிக்கா, மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தியிருந்தனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தெப்பத்திருவிழா நாளை (28-ந் தேதி) முதல் தொடங்குகிறது. வருகிற 9-ந் தேதி தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைத்தெப்பமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News