செய்திகள்

உடையார்பாளையத்தில் விஷம் குடித்த முதியவர் பலி

Published On 2017-01-26 19:48 IST   |   Update On 2017-01-26 19:48:00 IST
உடையார்பாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தை சேர்ந்த  கலியபெருமாள் (வயது 55). கூலிதொழிலாளியான இவருக்கு அடிக்கடி தீராத வயிற்றுவலி இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமா இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்கமுடியாமல் வீட்டுக்கு அருகே இருந்த விஷசெடியை அரைத்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த கலியபெருமாளை இவரது மகன் கமல்ராஜ் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கலியபெருமாள் மகன் கமல்ராஜ் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News