செய்திகள்

சிவகங்கை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

Published On 2017-01-20 15:10 IST   |   Update On 2017-01-20 15:10:00 IST
சிவகங்கை அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 55). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 12¼ பவுன் நகை, ரூ. 4 ஆயிரம் ரொக்கத்தை திருடினர்.

பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள 2 வீடுகளிலும் கொள்ளையடித்து உள்ளது. அங்கு கொள்ளை போன நகை, பணம் குறித்து தகவல் தெரியவில்லை.

கொள்ளை குறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News