செய்திகள்

அய்யலூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

Published On 2017-01-18 14:45 IST   |   Update On 2017-01-18 14:46:00 IST
அய்யலூர், வடமதுரை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடமதுரை:

அய்யலூர், வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கூலித்தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது தங்கமாபட்டியை சேர்ந்த தர்மராஜ் (67), குளத்துப்பட்டியை சேர்ந்த ஸ்ரீராம் (45) எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த பிச்சை (49) ஆகியோர் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து இதுபோல் லாட்டரி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் ராஜசேகர் எச்சரித்துள்ளார்.

Similar News