செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை பஸ் நிலையத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அரியலூர் கிளை சார்பில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லை ஒட்டி, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து கூறியதாவது:-
சாலை பாதுகாப்பு வார விழா மூலம் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழி முறைகள், உத்தரவு சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள் மற்றும் தகவல் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை சாலை பாதுகாப்பு வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
"விபத்தினால் வருவது துன்பம்! பாதுகாப்பினால் வருவது இன்பம், உரிமம் வாங்க எட்டு போடு! உயிரை காக்க ஹெல்மெட் போடு, படியில் பயணம்! நொடியில் மரணம், ஓடும் பேருந்தில் ஏறாதே! உயிரை பணயம் வைக்காதே, சீட்பெல்ட் அணிந்தால் பாதுகாப்பு! இதுவே பயணத்தின் உயிர்க் காப்பு''என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் மற்றும் கையேடுகளை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த பேரணியை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
எனவே, அரியலுர் மாவட்டத்தை சாலை விபத்துகள் நடைபெறாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் எ.சரவண வேல்ராஜ், கூறினார்.