செய்திகள்

மல்லூர் பகுதியில் 18-ந்தேதி மின்நிறுத்தம்

Published On 2017-01-16 16:49 IST   |   Update On 2017-01-16 16:49:00 IST
சேலம் மல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மல்லூர் துணை மின்நிலையத்தில் வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, திருமனூர், பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3.கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்ப்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை மல்லூர், துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News